Wednesday, February 28, 2007

ஏறாவூரில் குடும்பஸ்தர் இறந்து காணப்பட்டுள்ளளார்.

புதன் 28-02-2007

ஏறாவூர் காவல்துறையினர் இளம் கட்டடி தொழில் புரியும் குடும்பஸ்தர் ஒருவரை தலவை-புன்னைச்சோலை வீதியில் சூட்டுக்காயங்களுடன் செவ்வாய் காலை கண்டெடுத்துள்ளார்கள்.

இவர் 31 அகவையுடைய செல்வராசா சிவநாதன் எனவும் செங்கலடி ஐயங்கேணி பாரதி கிராமத்தை சேர்ந்தவர் இவரது மனைவி மத்திய கிழக்கு பகுதியில் பணிபுரிபவர் எனவும் தெரியவருகிறது.

சுpவநாதன் தனது தாயாரிடம் வேலைக்கு செல்வதாக கூறி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு சென்றதாகவும் அதன்பின் அவர்வீடு திரும்பவில்லை எனவும் இவரது உறவினர்கள் இவரை தேடுயதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் காவல்துறையினர் இவரது உடலத்தை புன்னைச்சோலைப் பகுதியில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பூநகரியை நோக்கி அகோர எறிகணை வீச்சு.

புதன் 28-02-2007

கிளிநொச்சி பூநகரியை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை அகோர எறிகணை வீச்சினை நடத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக முகமாலை, நாகர்கோவில், மணலாறு, ஓமந்தை, தள்ளாடி ஆகிய பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்று பூநகரியை நோக்கி அகோரமான எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

Tuesday, February 27, 2007

மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்.

செவ்வாய் 27-02-2007

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் ஏழு பேர் பயணம் செய்த ஹெலிகொப்டரை இலக்கு வைத்து மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆட்லறி தாக்குதலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இத்தாலிய தூதுவர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரும், தூதுவர்களும் பயணம் செய்த ஹெலிகொப்டர் மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய வேளை இவ் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே எமது செய்தியாளருக்கு தெரிவித்தார்..

இத் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேரும், பொலிஸார் மூன்று பேர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தில் காமயடைந்த தூதுவர்கள் இருவரிற்கு காயங்கள் ஏதும் பெரிதாக இல்லையெனவும், பொலிஸார் மாத்திரம் படுகாமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்..

தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டரில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர் உட்பட ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கான தூதுவர்களும் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமøயில் முப்படையினதும் உயரதிகாளின் கூட்டமொன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள மேலும் தெரிவித்தன..

Monday, February 26, 2007

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் சுட்டுக்கொலை

Monday February 26 2007 [maalaimalar.com]

இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அவர்கள் மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தத்தளிக்க விட்டனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களின் 60 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீன வர்கள் 6 பேர் ஒருவிசை படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அருணாச்சலம் என்பவருக்குக்கு சொந்தமான `அம்மை என்ற படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கலியபெருமாள் (வயது55), அஜீஸ்குமார் (19), ரமணன், ராமலிங்கம், செல்வமணி, காரைக்காலை சேர்ந்த அன்பழகன் ஆகி யோர் கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங் கை கடற்படையினர் துப்பாக் கியால் சுட ஆரம்பித்தனர்.

இதைக் கண்டதும் உயிருக்கு பயந்த மீனவர்கள் 6 பேரும் கையை மேலே உயர்த்தியபடி நின்றனர். இருந்த போதி லும் கடற்படையினர் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர்.

அப்போது அவர்கள் சுட்ட குண்டு ஒன்று மீனவர் கலியபெருமாளின் மார்பில் பாய்ந்தது. இதனால்அவர் அந்த இடத்திலேயே படகில் சாய்ந்து விழுந்தார்.

மற்றொரு குண்டு மீனவர் அஜீஸ்குமாரின் காலில் பாய்ந்தது.

காயம் அடைந்த 2 மீன வர்களையும் பார்த்தமற்ற மீனவர்கள் படகை உடனடியாக கரையை நோக்கி திருப்பினர். மீனவர்கள் 6 பேரும் இன்று காலை 7 மணி அளவில் கரைதிரும்பினர்.

துப்பாக்கி சூடுகுறித்து மீனவர்கள் கரைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கரையில் ஆம்புலன்ஸ் வண்டி தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

மீனவர்கள் கரையை அடைந்ததும் காயம் அடைந்த 2 மீனவர்களையும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மீனவர் கலிய பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் காயம் அடைந்த அஜீஸ்குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் நாகை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மற்றும் மீனவர்கள் குவிந்தனர்.

இலங்கை கடற்படையினர்களின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் அவர்கள் கோஷம் எழுப் பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிக்கப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் அருள்தாஸ் என்ற மீனவர் காயம் அடைந்தார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்வியோடு தமிழக மீனவர்கள் உள்ளனர்.

மேலும் இதற்கு பயந்து கடலுக்குச் செல்லாமல் இருந்தால் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்றும் மீனவர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

சீனாவிடம் இருந்து ஆயுத தளபாட உதவிகளை பெருமளவில் எதிர்பார்ப்பு.

திங்கள் 26-02-2007

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சீனாவிடம் இருந்து ஆயுத தளபாட உதவிகளை பெருமளவில் எதிர்பார்பதாக இராஜதந்திர வட்டாரங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன

இலங்கiயின் அயல் நாடான இந்தியா ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்களை வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது

இந்த நிலையில் பாகிஸ்தானையே பிரதான விநியோகிப்பாளர்களாக கொண்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் படைத்துறையும் பாகிஸ்தானிடம் இருந்து அண்மையில் பெற்றுக் கொண்ட ஆயுத தளபாடங்களில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் செயலற்ற தன்மை காரணமாக தமது பிரதான விநியோகஸ்தராக சீனாவை தெரிவு செய்ய தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஸ்ரீலங்காவும் சீனாவும் பௌதத்தை தமது பிரதான மதமாக கொண்டுள்ளமையால் பௌத்த நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அடிப்படையில் ஆயுத தளபாட உதவிகளை அதிகளவில் பெற முடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆசிய நாடுகளின் வல்லரசாக திகழும் சீனாவின் ஒத்துழைப்பை பெற்று தமது இராணுவ நடவடிக்கைகளை தொடர ஸ்ரீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையிலா குழுவினரின் முக்கிய நோக்கம் சீனாவிடம் இருந்து படைத்துறை உதவிகளை அதிகளவில் பெறுவதே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை உலகளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தோன்றி வரும் நிலைப்பாடுகளை முறியடிப்பதற்கான இராஜதந்திர உதவிகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்கக்படுகின்றது

வீற்றோ அதகாரம் கொண்ட ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான சீனா ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐநாவில் கெர்டு வரப்படும் தீர்மானங்களை இரத்துச் செய்யும் வகையிலான உடன்பாட்டையும் சீனாவுடன் மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தவுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ன.

கருணாநிதி எடுத்துள்ள நிலைப்பாடு!

ஞாயிறு 25-02-2007

அஜாதசத்ரு-

உலகத் தமிழர்களின் தலைவரென்று தனக்குத் தானே புகழாரம் சூடிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது நீண்டகால அரசியல் பக்குவம் தமிழின உணர்வு என்ற பாதையிலிருந்து விடுபட்டு குடும்ப அரசியல், சொத்து சேகரித்தல் என்ற பக்குவமற்ற அரசியல் போக்கொன்றுக்குள் தள்ளப்பட்ட ஒருவராகவே தனது அந்திமகால அரசியலை நடத்திக்கொண்டிருப்பதையே அவரது அண்மைய கால நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.

தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் அறிவுபூர்வமான திராவிடக் கொள்கைகள், அறிஞர் அண்ணாவின் அரசியல் வழிநடத்தல்கள் என்பவற்றிலிருந்து விடுபட்டு சத்ய சாயிபாபாவின் கால்களைத் தடவும் ஒரு சராசரி மூன்றாந்தர இந்திய அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மாற்றம் பெற்றுள்ளமையால் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு மாத்திரமன்றி உலகத் தமிழர்களுக்கும் அவரது அரசியல் நடத்தைகள் உதவப்போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நலன்கள் தொடர்பில் எப்போதும் வெளிப்படையாகவே நேர்மாறான போக்கொன்றை கடைப்பிடித்து வந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த ஈழத் தமிழர்கள் இன்று அவரது கடும் போக்கான நிலைப்பாடுகளால் நம்பிக்கையிழந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குப்பலங்களால் வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் தமிழகத்திற்கு விஜயம் செய்து ஆட்சிபீட மேறிய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ஆரம்பத்தில் சந்திப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஊடாகவும் மேற்கொண்ட முயற்சிகளை தட்டிக்கழித்தமையை எவரும் இலகுவில் மறந்துவிடமுடியாது.

எனினும், பின்னைய காலங்களில் பல்வேறு அரசியல் அழுத்தங்களின் காரணமாகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தோன்றிய அரசியல் ரீதியான ஆதரவு காரணமாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினரை இரு தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க மத்திய அரசு ஊடாக தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அறிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மத்திய அரசின் உயரதிகாரிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவினரை ஆரம்பத்தில் சந்திப்பதற்கான அனைத்து முட்டுக்கட்டைகளையும் விதித்ததாக தமிழக அரசியல்வாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி பின்னர் இந்திய மத்திய அரசுத் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக உண்மை நிலைவரங்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்திய உயரதிகாரிகளை சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்த வேளையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் விசேட பிரதிநிதியாக சுப. வீரபாண்டியனும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், அண்மைய காலங்களில் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும்போக்கான நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் முன்னொரு போதுமல்லாதளவிற்குப் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் இராமேஸ்வரம் கடற்பிராந்தியத்தில் வைத்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் உட்பட பல பொருட்களை கடத்திச்சென்ற இரு படகுகளும் 10 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதையடுத்து தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கெடுபிடிகளும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படை, எல்லைக்காவல்படை, தமிழக பொலிஸார், கியூபிராஞ்ச் புலனாய்வுத்துறையினர் இராமேஸ்வரம் கடலோரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தேடுதல்களையும் கண்காணிப்பையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தமிழக அரசினால் முடுக்கிவிடப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்புக் கெடுபிடி நடவடிக்கைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் மண்டபத்திலுள்ள பிரதான முகாம் தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள 133 அகதி முகாம்களிலும் ஏனைய பிரதேசங்களிலுமென சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கைத் தமிழர்கள் மிக நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

இவற்றில் செங்கல்பட்டிலுள்ள முகாம் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் மற்றும் ஆயுத வியாபாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சிறைக்கூடம் போன்றதாகும்.

ஈழத்தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் ஏற்கனவே பொலிஸ் கண்காணிப்பு உள்ள நிலையம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அங்குள்ள ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கியூபிராஞ்ச் பொலிஸாரினால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அறியவருகிறது

இதனைவிட தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட ஏனைய மாவட்டங்களில் அகதி முகாம்களுக்கு வெளியே வசிக்கும் ஈழத்தமிழர்களின் விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதுடன் பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலைமைக்கு மத்தியில் தான் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அண்மையில் கூட்டிய தனது அமைச்சரவைக் கூட்டத்தின் போது இராமேஸ்வரம் கடற்பகுதியில் இடம்பெற்ற ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கூடி ஆராய்ந்துள்ளதுடன் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆதரவான கருத்துகளை எவரும் வெளியிடக்கூடாதென்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்னெடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இதெல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தேசிய நலன்களை புறக்கணித்துவிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தலையிடுமென்று எவரும் கனவுகாண வேண்டாமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்தவொரு மன்னிப்புமின்றி தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமென்றும் இது தொடர்பான உத்தரவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையுடன் செயற்பட்டு அதற்காக தமிழகத்திலும் இந்திய மத்திய அரசிலும் குரல் கொடுத்துவரும் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு எதிராகவே தமிழக முதல்வர் கருணாநிதியின் இந்தக் கூற்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அண்மைய காலங்களில் உதாசீனப் போக்கொன்றை கடைப்பிடித்துவரும் இந்திய மத்திய அரசின் அதே நிலைப்பாட்டை உலகத்தமிழர்களின் தலைவர் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் கடைப்பிடிப்பது கவலைதரும் போக்கொன்றையே வெளிக்காட்டி நிற்கிறது.

அவலங்களுக்கும் மத்தியில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் தனது இனத்தையே வஞ்சிக்க முனையும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது கடும் போக்குகளுக்கு என்ன நியாயம் சொல்லப்போகிறார்?

Sunday, February 25, 2007

தமிழகத்தில் கைதானவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதிகோரும் இலங்கை.

வீரகேசரி

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனஇந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அதிகாரிகளால் கடந்த வாரம் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தவே இந்திய அரசிடம் இலங்கை அனுமதி கோரியுள்ளதாக தெரியவருகிறது.

கடற்புலிகளுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் படகொன்றை கடந்த 13 ஆம் திகதி நடுக்கடலில் வழிமறித்த இந்திய கடலோர காவற் படையினர் அதிலிருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் உட்பட ஐவரையும் கைது செய்து தமிழக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஏப்ரல் 13-க்குள் அதிகாரப் பகிர்வு திட்டப் பரிந்துரை.

ஞாயிறு 25-02-2007

வடக்கு - கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரிவுத் திட்டம் ஒன்றை ஏப்ரல் 13 ஆம் திகதிக்குள் சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜப்பான் சென்றிருந்த பசில் ராஜபக்ச, வெளியுறவு அமைச்சரிடமும் ஜப்பானின் சிறப்புத் தூதுவரிடமும் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் மார்ச் கடைசிக்குள் அதிகாரப் பகிர்வுத் திட்ட அறிக்கை தயாராகிவிடும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை நிலவரம் குறித்து கடந்த வாரம் இணைத்தலைமை நாடுகள் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளன. நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் அகாசி, அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சசர் ரிச்சர்ட் பௌச்சர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்குவது பற்றிய எவ்வித செயற்பாடும் இல்லாத நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளதாக இவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

எனினும் தமிழர்களது ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் விடுதலைப் புலிகளுடன் பேசத் தயாராக இருப்பதாக அண்மையில் காலியின் நடைபெற்ற அபிவிருத்தி கருத்தரங்கில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு சென்ற நோர்வேயின் ஹான்ஸ் பிறட்ஸ்கர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்தியவுடன் தற்போதைய நிலைமை குறித்து வருத்தமும் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

100 பிரதிநிதிகளுடன் மகிந்த சீனாப் பயணம்.

[ஞாயிறு 25-02-2007]

சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்தும் நோக்குடன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 40 தொழிலதிபர்கள் உட்பட 100 பேர் கொண்ட குழுவுடன் சீனாவிற்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட விமானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்கு பயணமாகும்.

இக்குழுவில் 15 அமைச்சர்களும் உள்ளனர். இருதரப்பு வர்த்தக உடன்பாடுகள், பொருளாதார இணக்கப்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல் போன்றனவற்றை நோக்காகக்கொண்ட இப்பயணத்தில் சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவின் 50 ஆவது ஆண்டு நிறைவு தினமும் கொண்டாடப்பட உள்ளது.

தொழிலதிபர்களின் குழு வர்த்தக மற்றும் தொழிற்சங்க சபைத் தலைவர் நவாப் ராஜப்டீன் தலைமையில் சுசந்த ரட்னாயக்க (ஜோன் கீல்ஸ்), திலக் டீ சொய்சா (ஏ.எம்.டபிள்யூ), தம்மிக்க பெரேரா (றோயல் செரமிக்), சிசிலி கொத்தலாவல (சிலிங்கோ குறூப்), கே.ஜே.தர்மதாச (நவலோக்கா), சுமல் பெரேரா (அக்சஸ் குறூப்), அஸ்லாம் ஓமார் (பிரண்டிக்ஸ் காமன்ஸ்), ரவி விஜயரட்ன (கிரே லைன்) ஆகியோரை கொண்டுள்ளது.

அமைச்சர் குழுவில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறீசேன, தினேஸ் குணவர்த்தன, ரோகித போகல்லாகம, சரத் அமுனுகம, ஏ.எச்.எம். பௌசி, அனுரா பிரியதர்சன யாப்பா, டலஸ் அழகப்பெருமா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பி.சந்திரசேகரன், பிராந்தியங்கள் விவகார மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களான பாண்டு பண்டாரநாயக்க, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் அரச தலைவருடன் பயணிக்கின்றனர்.

அதேசமயம் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, கேகாலை, காலி ஆகிய பிராந்தியங்களின் வர்த்தக சங்க உறுப்பினர்களும் இக்குழுவில் அங்கம் வகிப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தின் பிரதான நோக்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அபிவிருத்தித் திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்.கொம்.

தென்னாபிரிக்காவில் மூக்குத்திக்காக போராடும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை .

ஞாயிறு 25-02-2007

தென்னாபிரிக்காவில் தமிழ்ப் பெண் ஒருவர் மூக்குத்தி அணிவதற்காக பள்ளி நிர்வாகத்துடன் போராடி வருகிறார்.டர்பன் நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை (18). அங்குள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.ஒரு நாள் மூக்குத்தி அணிந்து பள்ளிக்குச் சென்றார்.

ஆனால், அதற்குப் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், சுனாலி பிள்ளை பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். இது குறித்து சுனாலி, பள்ளி நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சுனாலிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.

இதையடுத்து சுனாலி மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மேல் கோர்ட் சுனாலிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்பை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. அரசியல் சட்ட கோர்ட்டில் பள்ளி நிர்வாகம் இது குறித்து அப்பீல் செய்துள்ளது. சுனாலியும் இந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

சிறிலங்கா மீதான அழுத்தங்களில் இந்தியாவும் இணைந்து கொள்ளலாம்: மங்கள சமரவீர.

ஞாயிறு 25-02-2007

சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அதாவது இந்திய மத்திய அரசின் கொள்கைகள் தமிழ்நாட்டினால் வழி நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு எடுக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடுதான் பல தொழில்துறைகளில் அதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அபிவிருத்திகளால் இந்தியாவை உலக வரைபடத்தில் இனங்காட்டியுள்ளது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியில் இந்தியா, உயிராபத்துக்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு விநியோகம் செய்யாது என தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவின் நிலையை தெளிவாக காட்டியுள்ளது. இந்தியாவின் இந்த போக்கை மாற்ற வேண்டுமானால் நாம் அதிகாரப்பகிர்வை அங்கிகரிப்பதுடன் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பணிகளிலும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரச ஊடகங்களை அரசு தவறாக வழி நடத்துகின்றது. அதன் மீது குற்றம் சுமத்தும் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரு குற்றமாகும். அதாவது தகவல் தருபவர்களை கொல்லும் அரசின் திட்டம் அனைத்துலக சமூகத்தை எம்மிடமிருந்து விலகிச்செல்லவே வழிவகுக்கும்.

எனினும் எனது புதுடில்லி விஜயத்தின் போது இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டது. இது இராணுவ உதவிகளில் கூட சாத்தியமாக இருந்தது. இந்தியா எமது கோரிக்கைகளில் பலவற்றை தந்துதவ முன்வந்திருந்தது. இதில் கடற்படை மற்றும் விமானப்படைக்கான உதவிகளும் அடங்கும்.

உதாரணமாக எனது ஒரு வேண்டுகோளில் நான் இந்தியவின் பிரதமரையும், பாதுகாப்பு அமைச்சரையும் ஏற்றுக்கொள்ள வைத்திருந்தேன். அதனை தொடர்ந்து எமது தேவைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு 48 மணி நேரத்தில் இந்தியா தனது சிறப்பு குழுவை கொழும்பிற்கு அனுப்பியிருந்தது. இது நீங்கள் அரச தலைவர் பதவியை ஏற்ற பின்னர் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான உதாரணமாகும்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்தது போன்றதான உதவியை இந்தியா சிறிலங்காவிற்கு வழங்காது என முன்னாள் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தெரிவித்திருந்தார்.

கடத்தல்கள், படுகொலைகள் என்பன அரச படைகள், கருணா குழு, விடுதலைப் புலிகள் போன்றவற்றால் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அரச கட்டுப்பாட்டுப்பகுதி மற்றும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் நிகழ்கின்றன. இவை அரசால் அல்லது பயங்கரவாதக்குழுவால் மேற்கொள்ளப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு அதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் அரசு மீது இந்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்புள்ளது.

விடுதலைப் புலிகளினதும் அதன் முன்னணி அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரங்களின் மத்தியிலும் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விடுதலைப் புலிகள் மீதான தடையை கொண்டு வருவதற்கு சம்மதிக்க வைத்திருந்தது. உங்களின் வழிநடத்தலில் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திலும் கனடாவிலும் இதை செய்திருந்தது.

அரசு அதிகாரப்பகிர்வை அளிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் இதை செய்திருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியாவும் இதை ஆதரித்திருந்தது. எனவே நாங்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும், உதாசீனப்படுத்த முடியாது" என அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதினம்.கொம்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விவாதம்: மனோ கணேசன்.

ஞாயிறு 25-02-2007

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அடுத்த மாதம் இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப் பிரச்சினைக்கான செயற்குழுவின் விவாதங்களில் இலங்கைப் பிரச்சினையும் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

ஆட்கடத்தல், கொலைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் குறித்த ஆய்வறிக்கையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. எங்களது ஆட்சியாளர்களும் ஆய்வைப் பார்வையிடுவர். எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் எங்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் குழுவின் இயக்குநரான லூயிஸ் ஆர்பர் உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்ற உறுப்பினர்கள் இலங்கையில் அனைத்துலக மனித உரிமை அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Saturday, February 24, 2007

உணவுத் தட்டுப்பாட்டை மறைக்க அரச அதிகாரிகள் முயற்சி.

சனி 24-02-2007

யாழ் குடாநாட்டில் தற்போதும் உணவுத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக கோதுமை மா வழங்கப்படாமையால் பாணுக்கும் கூட தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு நேற்று கோதுமை மா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கூட மட்டுப்படுத்திய அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு போதுமானதென தெரிவிக்கப்பட்ட போதிலும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியளவுக்கு மா வழங்கப்படவில்லை.

இந்த நிலமையில் தற்போது மீண்டும் தனியார் வர்த்தகர்களுக்கு பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் யாழ் செயலக திட்டமிடற் பிரிவு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் வெளியில் தனியார் வர்த்தக நிலையங்களிலும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சர்வதேசத்திற்கு ஒரு மாயைத் தோற்றத்தை காட்ட அரச அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையின் மூலம் முனைந்து நிற்கின்றாhகள் எனப்பலரும் தெரிவிக்கின்றார்கள்.

பல நோக்புக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் மட்டுப்படுத்திய பொருட்களை வழங்கிவிட்டு தனியார் வியாபாரிகளுக்கு பொருட்களை வழங்கி யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லையெனக் காட்ட முயற்சிப்பதாக கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தாம் கேட்கும் அளவுக்கு உரிய பொருட்கள் எவையும் வழங்கப்படாததுடன் தம்மை மட்டுப்படுத்திய அளவில் மட்டும் பொருட்களை வழங்கும் படியும் மேலதிகமான ஒரு தொகுதி பொருட்களை தனியார் வர்த்தர்களிடம் வழங்கும் படியும் தமக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகும் தெரிவிக்கின்றார்கள்.

இதன் மூலம் தாம் தொடர்ந்து நட்டம் அடைய வேண்டியுள்ளதுடன் பொது மக்களும் ஒரு பொருளை இரண்டு இடங்களில் பெற வேண்டிய அவல நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் பொது மக்களும் தெரிவிக்கின்றார்கள்.

யாழில் இராணுவ சுற்றி வளைப்புகள்.

சனி 24-02-2007

யாழ்ப்பாணம் இன்று காலை முதல் கோண்டாவில், தாவடி, இணுவில், தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதிகள் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தேடதலுக்கு உட்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் காலையில் 6.00 மணியளவில் வீடு வீடாகச் சென்று இராணுவத்தினர் சோதனையிட்டதுடன் இளைஞர் யுவதிகளின் அடையாள அட்டைகளையும் வாங்கிச் சோதனையிட்டார்கள்.

காலையில் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழில் நிலையங்களுக்குச் சென்றவர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாத நிலமை காணப்பட்டது. வீதிகளினால் சென்ற இளைஞர் யுவதிகளும் கூட இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் உடற் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சனி 24-02-2007
-பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர்.

எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்பாணம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் 40 வீதம் திறமை அடிப்படையிலும், 60 வீதம் மாவட்ட கோட்டா அடிப்படையிலும் மருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் இம்முறை, முதல் 480 நிலைகளுக்குள் வந்த மாணவர்கள் திறமை அடிப்படையில் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவர். இதன்படி யாழ். மாவட்டத்தில் 24 ஆவது நிலையிலுள்ள மாணவன் பெற்ற தேசிய நிலை 473 ஆகும்.

இதேவேளை, மாவட்ட கோட்டா அடிப்படையில் இவ்வளவு காலமும் 540 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த இடங்கள் 30 ஆகும்.

ஆனால், இம்முறை 720 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டியது 40 இடங்களாகும். ஆனால், கிடைத்ததோ வழமைபோல் 30 இடங்களேயாகும்.

ஆகவே, யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டிய ஆகக்குறைந்த மருத்துவத்துறைக்கான இடங்கள் திறமையடிப்படையில் 24, மாவட்ட கோட்டா அடிப்படையில் 40 என மொத்தம் 64 ஆக இருக்க வேண்டும். ஆனால், கிடைத்திருப்பதோ திறமையடிப்படையில் 19 உம், கோட்டா அடிப்படையில் 30 உம் என 49 இடங்கள் மட்டுமே.

எனவே கிடைக்காமல் செய்யப்பட்டுள்ள மேலும் 15 இடங்களையும் பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, February 23, 2007

போர் முனைப்புக்கள் விடுதலைப் போராட்டப் பாதைக்கே வழிவகுக்கும் - விடுதலைப் புலிகள்

வெள்ளி 23-02-2007

"பயங்கரவாதத்திற்கு" எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது. மாறாக, சுயநிர்ணய உரிமை கொண்ட இறைமையுள்ள மக்களாக வாழ்வதற்கான விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் மக்களை இட்டுச் செல்வதற்கே இது வழிவகுக்கும்." என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக இணையத்தள குறிப்பில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு.....

"றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவரி 22, 2007 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தினுள் நுழைந்துகொண்டனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அப்போதைய சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த ஒப்பந்தமானது தற்போது எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இலங்கைத் தீவில் சமாதானத்திற்கான தேடலிலும், இனப்பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நோக்கிய வரலாற்றுப் பயணத்திலும் இது ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தமானது சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்டு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தீவின் ஏனைய சமூகத்தவரை ஒடுக்குவதற்குத் துணைபுரிந்த இலங்கையின் பெரும்பான்மையினரது அரசியலமைப்பினது எல்லைகளைக் கடந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தமானது தமிழீழ நடைமுறை யதார்த்த அரசினது இருப்பினை அங்கீகரித்துள்ளது.

இங்கு நடைமுறை யதார்த்த அரசு எனும் போது அது, தனித்துவமான மக்கள், பாதுகாப்புப் படை, காவல்துறை, நீதித்துறை, சிவில் நிர்வாகம் என்பவற்றுடன் மக்களைச் சிறந்தவகையில் நல்வழியில் ஆளுவதற்கான ஏனைய அனைத்து அம்சங்கள், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தமிழர் தாயகத்தின் இருப்பினைப் பிரதிபலிக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தன்னகத்தே கொண்டு, ஓர் அரசுடன் உடன்பாட்டினை எட்டும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலுள்ள படைவலுச் சமநிலையினை போர் நிறுத்த ஒப்பந்தமானது அங்கீகரித்துள்ளதுடன், அது படை வலுச் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தமிழர்கள் அவர்களது தாயகத்திலேயே முகம்கொடுத்து வந்தனர்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து முதல் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் நீதிக்கான தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கியது. இதன் காரணமாக தமிழர்களது அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டம் மற்றும் ஆயுதந் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பன இடம்பெற்ற காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிறிலங்காவினது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தரப்பினருக்கிடையே படைவலுச் சமநிலை காணப்படாதமையினாலும், சர்வதேச ஈடுபாடு இல்லாதமையினாலும் முன்னர் இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததோடு, சிறிலங்கா அரசாங்கம் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் மிகவும் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

இவ்வாறாக அமைதி முயற்சிகள் தோற்றுப்போன கசப்பான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இம்முறை, நோர்வேயினது அனுசரணையும், சர்வதேச சமூகத்தின் தீவிரமான ஆதரவும், பங்களிப்பும் தமிழ் மக்களுக்கு அமைதி முயற்சிகளில் முதற்தடவையாக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இன்று, வருந்தத்தகு வகையில், சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது ஈடுபாடு உண்மையானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ காணப்படவில்லை. இராணுவ வழிமுறையில் நகர்ந்து செல்லும் சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ, ஆக்கபூர்வமாக எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ சர்வதேச சமூகம் விரும்பமின்றிச் செயற்படுவதே போர் நிறுத்த ஒப்பந்தத்தினைப் பலமிழக்கச் செய்துள்ளது.

தரையிலும் வானிலும் கடலிலுமென சிறிலங்காவினது முப்படைகளும் மேற்கொண்டுவரும் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதிய பொறுமை காத்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் நாம் எமது பல போராளிகளை இழந்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் பெருந்தொகையான தமிழர்கள் காணாமற்போகிறார்கள்.

ஆனால், அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கின்ற போதும், சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் எடுக்காது நீதியற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையிலமையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சமதரப்பு என்ற யதார்த்தத்தினை இது சிதைப்பதோடு சமாதான முன்னெடுப்புக்களையும் பாதிப்பதாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத்தின் இதுபோன்ற நிலைப்பாடு வலுப்பெறுமிடத்து, தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அதிக கடும்போக்கைக் கைக்கொள்வதற்கே அது வழிவகுக்கும்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போதும் சர்வதேச சமூகமானது நீதியின்பால் நின்று செயற்பட்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்காதுபோனால், அது தமிழர் தாயகப் பகுதியில் ஒர் போர்ச்சூழல் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

சர்வதேசத்தினது பங்குபற்றலுடன் இடம்பெற்ற சமாதான முன்னெடுப்புக்களும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழ் மக்களைச் சினங்கொள்ள வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தமும் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களும், ஏனைய ஒப்பந்தங்களைப் போலவும் பேச்சுக்களைப்போலவும் தற்போது தோல்வியடைந்திருப்பதுதான் தமிழ் மக்களுக்குக் கசப்பான ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதோர் புறநிலையில்தான் தமிழர் தேசத்தில் இயல்புநிலையினை ஏற்படுத்தும் வகையில், போர் நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆறு வருடங்களின் முன்னர் டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 24, 2001 இல் மீண்டும் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். நோர்வேயின் முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மேற்குறித்த இந்த அறிவிப்பே வழிவகுத்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தி பேச்சுகளுக்கான உகந்த புறநிலையைத் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோசமான போரின் காரணமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை அனைத்து சுற்று அமைதிப் பேச்சுகளிலும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பும் இராணுவக் கெடுபிடிகளும் நீங்காது அமைதிப் பேச்சுகளுக்கான சாதகமான உகந்த புறநிலை ஏற்படமுடியாது என்பதை நேரடி சமாதானப் பேச்சுகளில் வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுக்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையான ஈடுபாட்டுடன் அவற்றில் பங்கெடுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேற்ப தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுக்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இவற்றை மதித்து நடப்பதற்குத் தவறிய இலங்கை அரசாங்கம், நிலமையினை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்புநிலையினை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறி, பொதுமக்கள் வாழிடங்களை இன்னமும் ஆக்கிரமித்துநிற்கிறது.

ஓவ்வொரு கட்டப் பேச்சுக்களின்போதும், தமிழர் தாயகப் பகுதியில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினோம். இது தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளைப் புறந்தள்ளிய இலங்கை அரசாங்கம் காலங் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேநேரம் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் நிலமை மோசமாகிச் சென்றது.

நிலமையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசாங்கம் தான் மதித்துச் செயற்படவேண்டிய கடப்பாடுடைய ஒப்பந்த விதிகளை மீறி, துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துத் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை குறிப்பிடதொரு கால வரையறைக்குள் களைந்துவிட வேண்டுமென ஒப்பந்தவிதி 1.8 கூறுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் இருப்பினை சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது அவதானிப்புகள் உறுதிப்படுத்துவதோடு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரச திணைக்கள அறிக்கையும் இந்த உண்மையினை ஏற்றுக்கொள்கிறது.

சிறிலங்காவிற்குத் தகவல் திரட்டும் ஒரு நடவடிக்கையாக விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்புத் தூதுவர் சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் ஆட்சேர்பில் ஈடுபடுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2002 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் நாங்கள் எட்டுமுறை பங்கெடுத்துள்ளோம். தமிழர் தாயகத்தில் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு பல பிரேரணைகளும் கட்டமைப்புகளும் ஆரம்ப கட்டப் பேச்சுகளின் போது உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உடன்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் அது தமிழர்களது வாழ்நிலையினை போதுமானளவு மேம்படுத்தியிருக்கும். இவற்றில் சில பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டபோதும் பின்னர் அவையனைத்துமே நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக புறந்தள்ளப்பட்டதோடு சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அவை கைவிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தூய மனிதாபிமான அடிப்படையில், இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கு வடக்கு கிழக்குக்கான உடனடி புனர்வாழ்வுக்கான உப குழு (Subcommitee for Immediate Rehabilitation of North East- SIHRN) உருவாக்கப்பட்டது. இருப்பினும் இது சிறிலங்கா அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கு முகங்கொடுத்து அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கான புறநிலையைத் தோற்றுவிக்கும் பொருட்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான (Interim Self Governing Authoriy ISGA) பிரேரணையைச் சமர்ப்பித்தோம்.

இவ்விடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான பிரேரணையின் அடிப்படையில் அமைதிப் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்பாத அன்றைய சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டும் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கான அடிப்படையாக ISGA இனை முன்னிறுத்தியும் போட்டியிட்ட 22 தமிழ் பிரதிநிதிகள் பெரும் வெற்றியடைந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் ஐனநாயக வழிமுறையூடாக வெளிப்படுத்திய விருப்பினை நிராகரித்து ISGA தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ள மறுத்தது.

இவ்வாறானதோர் புறநிலையில் டிசம்பர் 2005 ஆம் ஆண்டு இலங்கைத் தீவினை ஆழிப்பேரலை மிக மோசமாகத் தாக்கியது. தொடர்ந்து வந்த இனப்போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களே இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் எவ்வித உதவிகளுமின்றிய நிலையில் எமது இராணுவ சிவில் கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச உள்நாட்டு தொண்டர் அமைப்புகள் தமிழர் தாயகத்தில் மிகப்பெரியதோர் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாராட்டத்தக்க வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் எமது புலம்பெயர்ந்த மக்களின் உதவியே உடனடியாக பெரும் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுக்கத் துணைநின்றது. ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சர்வதேச உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில், இவ்வியற்கை அழிவு இடம்பெற்று ஆறு மாதங்களின் பின்னர் நோர்வே அரசின் அனுசரணையுடனும் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியுடனும் சுனாமிக்குப் பின்னான நடவடிக்கை முகாமைத்துவக் கட்டமைப்பு (Post Tsunami Operational Management Structure- PTOMS) உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஓர் மனிதநேய உதவிக்கான இக்கட்டமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்தால் அரசியலமைப்பைக் காரணங்காட்டி நிராகரிக்கப்பட்டது. சிறிலங்காவில் சட்ட பன்மைத்துவம் இன்மையினைக் காட்டுவதான இன்னொரு உதாரணமாக இது அமைகிறது. மனிதாபிமானம் மிக்க இந்த இயற்கை அனர்த்த முகாமைத்துவ விடயத்திற்கூட தமிழர்கள் நீதி பெறவுமில்லை, சமமாக நடத்தப்படவுமில்லை. இந்த நிலையில், ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர்களது பிரச்சினைகளைக் கையாள்வதற்கு மாற்று வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக சர்வதேச சமூகமோ, பாதிக்கப்பட்ட மக்களை நிர்க்கதியில் விட்டுவிட்டு வெளியேறியது.

இச் சூழமைவிற்தான் 2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தற்போதைய ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அதிகளவிலான சிங்கள வாக்குகளைப் பெற்று சிறிலங்காவின் ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்சவின் வரவுடன் தமிழர்களுக்கெதிரான நிழல் யுத்தம் முடுக்கிவிடப்பட்டது. தமிழர் தேசத்தின் இருண்ட பகுதி ஆரம்பமானது. கொடூரமான கொலைகள் மற்றும் காணாமற்போதல்களால் மக்கள் அச்சமடைந்தார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் காணாமற் போதல்களுக்கும் படுகொலைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் தமிழ்ப் பொதுமக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தொடரும் நிலையில் அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகள் கொலைக்களங்களாக மாறிவிட்டன. குறித்த பகுதிகளில் வாழும் தமிழ்ப் பொதுமக்கள் இயல்புநிலையினை இழந்து அச்சத்தின் மத்தியில் தமது வாழ்க்கையினை ஓட்டுகிறார்கள்.

கொலைகள், காணாமற்போதல்கள், துன்புறுத்தல்கள் என்பவற்றுடன் சிறிலங்கா அரசாங்கமானது வகைதொகையற்ற விமானக் குண்டுத்தாக்குதல்களைத் தமிழர் தாயகப் பகுதிகளில் நடாத்தி வருகின்றது.

பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, சூடானிய அரசாங்கத்தினைப் போலவே இலங்கை அரசாங்கமும் மெருமெடுப்பிலான விமானக் குண்டுத்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் வாழிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் மீது விமானக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதானது, ஜெனீவா உடன்பாடு நான்கினது சரத்து 147 இன் அடிப்படையில் ஓர் போர் குற்றமாகும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.3 இற்கு முற்றிலும் முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல்களை நடாத்துவதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமித்து நிற்கிறது. இவ்வாறாக, புலிகளை வலிந்து போருக்கிழுக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டபோதும், புலிகள் தங்களால் இயன்ற பொறுமையினைக் காப்பதோடு, சில தற்காப்புத் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

மோசமாகிச் செல்லும் இந்த நிலையில்தான் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கம் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பேச்சுக்களின்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்த சிறிலங்கா அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களையும் களைவதாகக் கூறியது.

ஜெனீவா பேச்சுக்களின் போது அரச பேச்சுக்குழு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் மோசமான இராணுவ நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தமிழ்மக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டார்கள், காணாமற்போனார்கள். சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையை (ICCPR:International Covenant on Civil and Political Rights) ஏற்றுக்கொண்டுள்ள நாடென்ற வகையில் இக்கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இப்படுகொலைகள் காணாமற் போதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் மற்றும் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் கொபி அனான் ஆகியோரின் ஆழ்ந்த கரிசனைகளையும் கண்டனங்களையும் நினைவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.

மேலும் சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டிப் படுகொலைகளுக்கான சான்றுகள் தம்மிடமிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை மே மாதம் 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது கண்டன அறிக்கையில் (AI Index: ASA 37/014/2006 ) வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகள் குறித்து சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதானது, தமிழர்களது பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் நேர்மைத்தன்மை மற்றும் வினைத்திறன் தொடர்பில் கேள்வியினை எழுப்பியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளோ, அதியுச்ச பொறுமையுடனிருந்தவாறு போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கத்தை வலியுறுத்தினர். குறித்த இந்தச் சூழமைவில், நாம் சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்று மீண்டும் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நோர்வேயினது அனுசரணையுடனும் சுவிஸ் அரசாங்கத்தினது ஏற்பாட்டுடனும் ஒக்ரோபர் 2006 இல் அரச தூதுக்குழுவுடன் பேச்சுகளை மேற்கொண்டோம். இப் பேச்சுகளில் நாம் எமது அதியுச்ச நெகிழ்வுப் போக்கையும் பொறுமையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

யாழ். குடாநாட்டிற்கான ஒரே ஒரு தரைவழிப் பாதையான ஏ-9 பாதையினை மூடி, அங்கு பெரும் மனித அவலம் ஏற்படுவதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பேச்சுக்களின் போது சுட்டிக் காட்டினோம். அண்ணளவாக 50,000 ஆயுதப்படையினர் ஆக்கிரமித்து நிற்கும் குடாநாட்டுக்கான பாதை மூடப்பட்டதன் காரணமாக, அங்கு ஆறு இலட்சம் பொதுமக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையினுள் அடைக்கப்பட்டவரானார்கள்.

குறித்த இந்த நெடுஞ்சாலையினை திறக்க அரச தூதுக்குழுவினர் உடன்பட மறுத்தமையானது பேச்சுக்கள் தோல்வியில் முடிவதற்கு வழிவகுத்தது. இப்பாதை மூடப்பட்டிருப்பது புதிய "பேர்ளின் சுவரினைத்" தோற்றுவிக்கின்றது என நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உரிமையை மீறுகின்ற நடவடிக்கையாக அமைந்த ஏ-9 சாலை மூடப்பட்டமை யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் மீறியுள்ளதோடு, அது பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்வதையும் தடுக்கிறது. குறித்ததொரு மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்லவிடாமல் தடுப்பதானது சர்வதேச சட்டத்தினை (சரத்து 147) முற்றாக மீறும் செயல் என்பதோடு, தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை உறுதிப்படுத்தத் தவறியது.

ஜெனீவா உடன்பாடு நான்கின் சரத்துக்கள் 55 மற்றும் 59-63 ஆகியவற்றை முற்றாக மீறும் செயலாகும். நாட்டினது இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான ஓர் "முக்கிய நகர்வாக" கொழும்பினது இரண்டு அரசியல் கட்சிகளின் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டினைக் காட்டுவதற்கு ஜெனீவாவில் அரச தூதுக்குழுவினர் முனைந்தார்கள். தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலற்றுக் கிடக்கிறது. அத்துடன், இந்த செயலற்றுப்போகும் அரசியல் முறைமை சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைத்த நாள்முதல் அதனது மக்களுக்கு துன்பத்தையே விளைவித்து நிற்கிறது.

இன்றுடன் போர்நிறுத்த உடன்படிக்கை தனது ஐந்தாவது வருடத்தை அதாவது 1,826 ஆவது நாளைக் கடக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான சரத்து 2 பொதுமக்கள் மீதான சகல துன்புறுத்தல்களும் நீக்கப்பட்டு அவர்கள் மீளவும் தமது வாழிடங்களுக்கு திரும்புவதையும் வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் ஏனைய பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஆனால், இன்றும் தமிழர் தாயகத்தில் மூன்றிலொரு மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் அமைந்துள்ளது. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அதியுச்ச இராணுவ நலன்கள் என்ற போர்வையில் மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றி தொடர்ந்தும் அவ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இச்செயற்பாடானது பொதுமக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் ஜெனீவா உடன்படிக்கையின் இரண்டாவது மேலதிக இணைப்பின் 17 ஆவது சரத்தினை (Article 17 Geneva Conventions second Additional Protocol 2) மீறியுள்ளது.

மேலும் தரை வழிப் போருக்கான 1907 ஹேக் உடன்படிக்கையின் 46 ஆவது சரத்து (Article 46 paragraph 2 of the 1907 Hague Convention) பொது மக்களின் உடமைகளைப் பறிமுதல் செய்வதைத் தடுக்கிறது. இன்று சர்வதேச அமைதி உடன்படிக்கைகளுக்கான முன்னுதாரணங்களாக இருக்கும் கொசோவோ, பொஸ்னியா, புரூண்டி, ஜோர்ஜியா, மசிடோனியா போன்ற ஏனைய சர்வதேச அமைதி உடன்படிக்கைகள் இராணுவ நலன்களைக் காரணம் காட்டி இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பிச் செல்வதை மறுக்கவில்லை.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில், அரச படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித அவலம் எமது மக்களை வெறுப்பின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மாத்திரம் தமிழர் தாயகத்தில் 1591 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 674 பேர் காணாமற்போயுள்ளார்கள். உயர் பாதுகாப்பு வலயங்களைக் காரணங்காட்டி வெளியேற்றப்பட்ட 300,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைவிட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் மாத்திரம் 210,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறானதோர் நெருக்கடியான கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் நடுநிலமைத் தன்மையாலும் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலாலுமே நீதியான நிலையான அமைதியை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்த முடியும். இந்த யதார்த்தத்திற்கு முரணாகவும் பக்கச்சார்புடனும் செயற்பட்டு தமிழர் தரப்பை மாத்திரம் ஓரங்கட்டி பலவீனப்படுத்த முனைவது, சமாதான முனைப்புக்களைச் சிதைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களை அடக்கும் வகையிலமையும் சிங்கள அரசினது திட்டத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.

மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலமைந்த எந்தவொரு போர்நிறுத்த உடன்படிக்கையினதும் இருப்பு, இரு தரப்பினது படை வலுச்சமநிலையும் சம அந்தஸ்தும் பேணப்படுவதிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையில் சம அந்தஸ்தும் வலுச்சமநிலையும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை உணரப்படவில்லை. இந்தத் தேவை, எந்தவொரு பிணக்கினையும் சமாதான வழிமுறை மூலம் தீர்ப்பதற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை சிதைந்து போவதற்கும் அமைதிப் பேச்சுகள் குழம்புவதற்கும் இதுதான் வழிவகுத்தது. சிறிலங்கா அரசின் பரப்புரைகளைச் செவிமடுத்து பேச்சுகளில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாகப் பங்குபற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் "பயங்கரவாதிகள்" என ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் அறிவித்தமை அமைதிப்பேச்சுக்களின் முன்னெடுப்பை கேள்விக்குறியாக்கியதுடன், தமிழர்களது சுய நிர்ணய அரசியல் போராட்டத்தினை நசுக்கி, சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடாத இராணுவத் தீர்வை நோக்கிய நகர்வை வேகப்படுத்தியது துரதிஸ்டவசமானதே. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ முனைப்புக்கள் என்பன போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அர்த்தமற்றதாக்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருவெற்றி மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் ஓர் தேசிய விடுதலை இயக்கம். எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுய நிர்ணய உரிமை கொண்ட மக்களாக வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம்.

சிறிலங்காவின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் காரணங்காட்டி தமிழர் தாயகத்தின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது.

சர்வதேச சமூகமானது இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகிறது போலத் தெரிகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட தென் சூடான் மக்கோ உடன்படிக்கை (Machkos protocols) சூடானின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ, சேர்பிய மொன்ரநீக்ரோ உடன்படிக்கை மற்றும் கொசோவோவின் எதிர்காலத்துக்கான தீர்மானம் சேர்பியாவின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்படவில்லை.

இங்கு குறித்த இம்மக்கள் தமது சுயநிர்ணய உரிமையுடனும் இறைமையுடனும் வாழ வழிசெய்யப்பட்டுள்ளதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, நிராகரிக்கப்பட்டுள்ளமையானது எமது மக்களின் நம்பிக்கைகளையும் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான அவர்களது எதிர்பார்ப்புகளையும் சிதைத்துள்ளது. "பயங்கரவாதத்திற்கு" எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது.

இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது. மாறாக, சுயநிர்ணய உரிமை கொண்ட இறைமையுள்ள மக்களாக வாழ்வதற்கான விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் மக்களை இட்டுச் செல்வதற்கே இது வழிவகுக்கும்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன வண பிதா பற்றிய விசாரணை ஆரம்பம்.

வெள்ளி 23-02-2007

ஆறு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன கத்தோலிக்க மத குருவான வண பிதா ஜிம் பிறவுண் தொடர்பான விசாரணைகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை ஆணைக்குழு, மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்த தருணத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் 34 வயதான வண பிதா ஜிம் பிறவுண் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய உதவியாளருடன் பயணம் செய்துகொாண்டிருந்த போது காணாமல் போனார்.

படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள இராணுவ சோதனைச் சாவடி ஒன்றின் முன்பாகவே இவர் தனது உதவியாளரான விமலதாசுடன் இறுதியாகக் காணப்பட்டார்.

வண பிதாவுக்கும், அவரது உதவியாளருக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் முகமான விசாரணைகளை நடத்துமாறு கத்தோலிக்க அமைப்புக்களும், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிறுவனங்களும் அரசாங்கத்தைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளன.

சிறிலங்காவிலுள்ள பாப்பரசரின் தூதுவர் வண மரியோ செனாரி ஆரம்பம் முதலே இந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தி வந்ததுடன், காணாமல் போன இருவரது குடும்பத்தினருடைய இல்லங்களுக்கும் நேரில் சென்றிருந்ததுடன், இந்த சோகமான செய்தியை பாப்பரசருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் தந்த மரியோ செனாரி, "அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவசார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் இவ்விடயம் தொடர்பாக நான் தொடர்புகொண்டு பேசினேன். வண பிதா ஜிம் பிறவுண் காணாமல் போன விவகாரம் உட்பட முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக அரச தலைவரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும்" என அவர் எனக்கு உறுதியளித்தார்.

"என்னுடன் தொடர்புகொண்டுள்ள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக நல்லெண்ணத்துடனும், தனிப்பட்ட அக்கறையுடனும் இருப்பதை என்னால் காணக்கூடியதாகவிருக்கின்றது. அடுத்துவரும் வாரங்களில் அல்லது மாதத்தில் உண்மை என்ன என்பதை எம்மால் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என நாம் நம்புவோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை ஆரம்பித்தது.

2005 ஓகஸ்ட்டில் இடம்பெற்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, 2006 ஓகஸ்ட்டில் 'பட்டினிக்கு எதிரான அமைப்பு' என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் மூதூரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பாகவே இவ் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவிருக்கின்றது. இவ்விசாரணைகளை அனைத்துலக கண்காணிப்பார்கள் மேற்பார்வையிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ். மாவட்ட ஆயர் வண பிதா தோமஸ் செளந்தரநாயகம் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், "வண பிதா ஜிம் பிறவுணின் விவகாரம் இந்த விசாரணைக் குழுவின் பட்டியலில் ஆறாவதாகவே இடம்பெற்றிருக்கின்றது" எனத் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறை சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், ஆனால், விசாரணைகளின் முன்னேற்றம் மிகவும் மெதுவானதாகவே காணப்பட்டது" எனவும் சுட்டிக்காட்டினார்.

2006 ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருப்பதாக குடாநாட்டிலுள்ள பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்கள்தான் இதற்குக் காரணமாக இருந்துள்ளன என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

Thursday, February 22, 2007

எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் -என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார்.

வியாழன் 22-02-2007

சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் .

என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நிலை மோசமடைந்து வருவதையடுத்து மக்கள் பீதி கொண்டு இடம் பெயருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கோரி யேர்மனிய அரசிற்கு தமிழ் அமைப்புகள் கடிதம்.

வியாழன் 22-02-2007

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதும் அமுலிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சிறீலங்கா அரசு தமிழ்மக்களை படுகொலைசெய்வதிலும் போக்குவரத்து பாதைகளை மூடி தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து வருகின்றது.

சிறீலங்கா அரசின் இச்செயலை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து யேர்மன் தமிழ்பெண்கள் அமைப்பு தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மற்றும் யேர்மனிய தமிழ் அமைப்புக்கள் யேர்மனிய அரசிடமும் யேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது.

திருகோணமலையில் மூவர் சுட்டுக்கொலை.

வியாழன் 22-02-2007

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ஒருவரும் நகரப்பகுதியில் வைத்து இருவரும் நேற்றைய தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.இதில் ஒரு யுவதியும் இரு ஆண்களும் அடங்குவர்.சுட்டுக்கொல்லப்பட்ட யுவதி நேற்று இரவு வீட்டிலிருந்த போது இரு மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் குறிப்பிட்ட யுவதியை வீட்டுக்கு வெளியில் வைத்து சுட்டுக்கொண்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர் ப.சிவதர்சினி (33) ஆவார்.இதேவேளை நேற்று மாலை அன்புவெளிபுரம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதியான பொன்னன் மகேந்திரன் (28) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.அத்துடன் நேற்று இரவு 7.30 தம்பலகாமம் பகுதியில் வைத்து சின்னத்தம்பி தவபாலன் (51) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவ் மூன்று உடல்களும் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் படுகொலை: வன்னியில் நாளை துக்க நாள்.

வியாழன் 22-02-2007

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் நாளை வெள்ளிக்கிழமை (23.02.07) துக்க நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறை இறுதியாண்டு மாணவரான கிருஸ்ணன் கமலதாஸ் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து துக்க நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கல்விச் சமூகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு முழுமையான துக்க நாள் கடைப்பிடிக்குமாறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அனைத்து தமிழ் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

துக்க நாளில் கண்டன மனுக்களும், மாணவர்களினால் கையளிக்கப்படவுள்ளன.

Tuesday, February 20, 2007

இந்தியாவில் நடைபெற்ற கார் பந்தயம்; இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

.
இலங்கை - இந்திய அணிகளிடையே கோவையில் நடந்த கார் பந்தயத்தில் இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. மெக்கோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இலங்கை - இந்திய கார் பந்தய வீரர்களுக்கிடையே சிநேகபூர்வ போட்டி கோவை செட்டிபாளையம் `கரி மோட்டார் ஸ்பீட்வே'யில் நேற்று முன்தினம் நடந்தது.

இலங்கை - இந்திய வீரர்கள் 11 பேர் போட்டியில் பங்கேற்றனர். பரபரப்பாக நடந்த போட்டியில் முதல் ஐந்து சுற்றுக்கு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு காரை ஓட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர்களை விட, இலங்கை வீரர்கள் குறைந்த நேரத்தில் மிக வேகமாக காரை ஓட்டினர்.

இந்தியாவிலிருந்து அகினேனி பிரசாத், கௌரவ் தலால், ரொமானி டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஜேர்மனி வீரர் கார்மர் கிறிஸ்ரியன் இந்தியாவுக்காக போட்டியில் பங்கேற்றார்.

இலங்கை அணி சார்பில் ஷிராரா ஜெயவர்தன, தினேஷ் ஜெயவர்தன, ரிகாஷ் காலித், ரொஹான் டி சில்வா, பெரி பொன்னம்பலம், அகமது ரியாஷ் பாரூக், நவின் குணசேகர ஆகியோர் பங்கேற்றனர்.

பத்து சுற்றுகள் கொண்ட முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:

இலங்கையைச் சேர்ந்த ரொஹான் டி சில்வா, தினேஷ் ஜெயவர்தன. இந்தியாவைச் சேர்ந்த அகினேனி ஆனந்த் பிரசாத்.